நவீனகால அன்னை தெரசாக்கள்
02-07-2013
நர்ஸ் வேலை என்பது மிகவும் கடினமான ஒரு வேலை ஆகும். இரத்தத்தைக் கண்டாலே பயப்படும் நம் மக்கள் பலர் இருக்க, விபத்தில் அடிப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட ஒருவரை ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கொண்டு வந்தாலும் எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி அடிப்பட்டவர்களின் காயத்திலுள்ள இரத்தத்தை சுத்தம் பண்ணி, தேவையான முதலுதவிகள் அனைத்தும் உடனடி செய்பவர்கள் நர்ஸ்களே.
வீடுகளில் பராமரிக்க முடியாத அசுத்தமான நோயாளிகளையும் எவ்வித அருவருப்பும் காட்டாமல் அன்புடன் உபசரிக்கும் நற்குணம் வாய்ந்தவர்கள் நர்ஸ்களே. கெட்டு அழுகி போன புண்களைக்கூட எவ்வித வெறுப்பும் காட்டாமல் சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு போட்டு நோயாளிகளுக்கு ஆறுதல் அளிப்பவர்கள் நர்ஸ்களே.
இரவிலும் தூங்காமல் கண் விழித்து, சொந்தபந்தங்கள் தூங்கினாலும் அவர்களையும் தட்டி எழுப்பி நேரம் தவறாமல் உள்நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து ஊசிபோட்டு நோயாளிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருபவர்கள் நர்ஸ்களே. நம் நாட்டிலுள்ள நர்ஸ்களின் தியாகத்தைக் கண்டுதான் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்திய நர்ஸ்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கிடைப்பதுபோல் இந்திய நர்ஸ்களுக்கு போதிய சம்பளமும் மரியாதையும் நம் நாட்டில் கிடைப்பதில்லை.
எனவே, நவீன அன்னை தெரசாக்கள் போல இரவும் பகலும் ஓய்வின்றி ஓடி ஓடி உழைக்கும் இந்திய நர்ஸ்களுக்கு, வேலை செய்யும் கால அளவை குறைப்பது கட்டாயம் ஆகும். விக்டரி கட்சி ஆட்சிக்கு வந்தால், நர்ஸ்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்கவும், அடிப்படை சம்பளத்தை ஆறாயிரமாக உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நர்ஸ்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க, விக்டரி கட்சி சார்பாக வேட்பாளர்களாக போட்டியிட 54 நர்ஸ்களை (10%) இந்தியா முழுவதும் வரவேற்கிறோம். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற நர்ஸ்களை அன்புடன் அழைக்கின்றோம். விக்டரி கட்சியில் உறுப்பினர் ஆகும் நர்ஸ்கள் அனைவருக்கும் பணி செய்யும் இடங்களில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஓடி வந்து உதவிகள் செய்யப்படும். உறுப்பினராக எவ்வித உறுப்பினர் கட்டணமும் இல்லை. ஆகவே இந்தியாவிலுள்ள நர்ஸ்கள் அனைவரும் விக்டரி கட்சியில் உறுப்பினர் ஆவீர். நர்ஸ்களே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் விக்டரி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்.
நன்றி வெல்க நர்ஸ்கள் ஒற்றுமை.
இந்திய மக்கள் நலப்பணியில்
என்றென்றும் மகிழ்வுடன்.
றிச்சர்டு
Tags:
Other News