மணவாளக்குறிச்சி, சாலத்திவிளையில் வெறிநாய் கடித்து குதறியதில் குழந்தை படுகாயம்

மணவாளக்குறிச்சி, சாலத்திவிளையில்
வெறிநாய் கடித்து குதறியதில் குழந்தை படுகாயம்
31-07-2013
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தேங்காய்கூட்டுவிளை, ஆறான்விளை, ஆசாரிதெரு, பம்மத்துமூலை, பெரியவிளை, வடக்கன்பாகம், சக்கப்பத்து, சாலத்திவிளை போன்ற பகுதிகளில் தற்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில வெறிநாய்களும் உள்ளது.

மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது அவர்களை நாய்கள் விரட்டுவதும், மாணவர்கள் ஓடுவதும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை பின்னால் விரட்டி சென்று கடிக்க பாய்வதும் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சாலத்திவிளையை சேர்ந்த ஜகுபர்சாதிக் என்பவரது மகன் முகம்மது ராசிக் (வயது 3) வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வெறி நாய் முகம்மது ராசிக்கை கடித்து குதறிக்கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து நாயை விரட்டி அடித்தனர்.
இதில் படுகாயம் அடைந்த முகம்மது ராசிக்கை சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அவனுக்கு தொடர்ந்து சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சாலத்திவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுபடுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous News Next News