மணவாளக்குறிச்சி பகுதியில் பஸ்சிற்குள் குடைபிடித்தபடி பயணம் செய்த பயணிகள்

பஸ்சிற்குள் குடைபிடித்தபடி பயணம் செய்த பயணிகள்
19-06-2013
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு வழியாக குளச்சலுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் பேருந்து மணவாளக்குறிச்சி அடுத்த மண்டைக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அப்போது பஸ்சின் மேற்கூரையில் விழுந்த மழைநீர் பஸ்சுக்குள் ஓட்டை வழியாக கொட்டதொடங்கியது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நனைந்தபடியே பயணம் செய்தனர்.
இதற்கிடையே கையில் குடை வைத்திருந்த பயணிகள் மழைநீர் நனையாமல் இருக்க பஸ்சுக்குள் குடையை பிடித்து கொண்டனர். மழை நீரில் நனைந்தபடி சென்ற பயணிகள் ஓட்டுனர் மற்றும் நடத்துநருடன் தகராறில் ஈடுபட்டனர். அதற்கு ஓட்டுனர் மற்றும் நடத்துநரும் நாங்கள் என்ன செய்யமுடியும், நாங்களும் உங்களை போல்தான் நனைந்தபடியே பஸ்சில் வந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினர்.

Post a Comment

Previous News Next News