மணவாளக்குறிச்சி பகுதியில் 2 குழந்தைகளின் தாய் மாயம்

மணவாளக்குறிச்சி பகுதியில் 2 குழந்தைகளின் தாய் மாயம்
18-04-2013
மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் அருகே உள்ள வயக்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி ஜெயா (வயது 31). செல்வன் மற்றும் அவரது அண்ணன் பிரான்சிஸ் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனால் ஜெயா, இவரது 2 குழந்தைகள் மற்றும் பிரான்சிஸ் மனைவி ஸ்டெல்லா பாயும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 8-ம் தேதி காலை 8 மணி அளவில் ஜெயா தக்கலை அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தனது மகன் ஜெனில் குமாரை விட்டுவிட்டு வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
உறவினர் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஸ்டெல்லா பாய் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயா குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous News Next News