மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 2–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 2–ம் நாள் காட்சிகள்
05-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 2–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-
 முதல் நாள் திருவிழா அன்று திருவிளக்கு
பூஜை நடந்தகாட்சி 
காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது., 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6 தீபாராதனையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5 மணிக்கு 6 சிறப்பு நாதஸ்வரம் மற்றும் சாயரட்சை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும் கோவிலில் நடந்தது.
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்
விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டன 
அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றகாட்சி 
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மகாத்மிய பாராயணம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பார்வதிபுரம் குருஜி பேபி அம்மா சாரதா ஆஸ்ரமம் லெக்ஷ்மி குழுவினரின் அகவல் பாராயணம் நிகழ்ச்சியும், 10 மணிக்கு ஆன்மிக மகாபாரதம் தொடர் விளக்க உரை நிகழ்வும் நடந்தது.
வில்லிசை கச்சேரி நடந்த காட்சி
சமய மாநாடு நடந்த காட்சி
 பக்தி இன்னிசை கச்சேரி நடந்த காட்சி
பிற்பகல் 12.30 சமய மாநாடு நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு தெக்குறிச்சி ஆதி சக்தி வில்லிசை குழுவினரின் வில்லிசை கச்சேரியும், இரவு 10 மணிக்கு லெட்சுமிபுரம் பிரியதர்ஷினி நாட்டிய பள்ளி மாணவிகளின் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
வில்லிசை  வீடியோ காட்சி 
பரத நாட்டிய வீடியோ காட்சி 

Post a Comment

Previous News Next News