மணவாளக்குறிச்சி அருகே தனுஷ் நடிக்கும் படம் சூட்டிங்

மணவாளக்குறிச்சி அருகே தனுஷ் நடிக்கும் படம் சூட்டிங்
08-02-2013
இயக்குநர் பரத் பாலா மற்றும் தனுஷ்
மணவாளக்குறிச்சி அருகே மண்டைக்காடு புதூரில் தனுஷ் நடிக்கும் புதிய படம் 2-வது கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த புதிய படத்திற்கு "மரியான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 30 நாள்கள் நடைபெற்றது. பின்னர் குமரி மாவட்டத்தில் கோவளம், மணக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. 

தொடர்ந்து சென்னையில் ஸ்டுடியோவில் சூட்டிங் நடந்தது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு மண்டைக்காடு புதூரில் நடக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் சூட்டிங் நடைபெறும் என தெரிவித்தனர். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், பூ என்ற படத்தில் நடித்த பார்வதி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தனுஷின் நண்பராக அப்புக்குட்டியும் நடிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மார்க்
மற்றும் தனுஷ்
இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வந்தே மாதரம் என்ற ஆல்பத்தை இயக்கிய பரத் பாலா என்பவர் இயக்குகிறார். மார்க் என்பவர் ஒளிப்பதிசெய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் ஏப்ரல் அல்லது மே மாதம் திரைக்கு வருகிறது என தெரிகிறது.

இந்த படத்தில் "அழகர் சாமியின் குதிரை" என்ற படத்தில் நடித்த அப்புக்குட்டி நம்மிடம் பேசிய போது:- நான் இந்த படத்தில் தனுஷின் நண்பராக நடிக்கிறேன். தற்போது மரியான் படத்தை தொடர்ந்து 'பீமன் அஸ்தினாபுரம்', 'சும்மா கச்சிதமா இருக்கு', 'வெற்றிவேல் முருகன்' உள்பட பல திரைப்படங்களில் நடிக்கிறேன். மேலும் 'பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இந்த வருடம் முழுவதும் எனக்கு கால்ஷீட் உள்ளது". இவ்வாறு அப்புக்குட்டி கூறினார்.
தனுஷ் நடித்த காட்சி படமாக்கப்படுகிறது.
நடிகர் அப்புக்குட்டி

Post a Comment

Previous News Next News