மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர்
மோட்டர் சைக்கிள் விபத்தில் பலி
14-02-2013
மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவில் வசித்து வருபவர் முஹம்மது பஷீர். இவர் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் 'மதீனா' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகன் அஷ்ரப் (வயது 25). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சில தினங்களுக்கு முன்பு வேலை சேர்ந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அஷ்ரப் இன்று காலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் மார்த்தாண்டம் சென்றதாக தெரிகிறது. காலை சுமார் 8.15 மணி அளவில் மார்த்தாண்டம் அருகில் உள்ள சிராயன்குழி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அஷ்ரப் சென்ற மோட்டர் சைக்கிள் அருகில் வந்த ஒரு வாகனம், மோட்டர் சைக்கிளை இடித்துள்ளதாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி அஷ்ரப் ரோட்டில் விழுந்தார்.
![]() |
| தன்னுடைய மூத்த சகோதரருடன் அஷ்ரப் |
இது குறித்து அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து அஷ்ரபின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து இன்று மாலை 5.15 மணி அளவில் மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு அஷ்ரப் உடல் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தார்களும், பொதுமக்களும் அஷ்ரபின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
6 மணி அளவில் அஷ்ரப் உடல் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Announcements




