மணவாளக்குறிச்சியில் உத்தம நபியின் உதயதின விழா நிகழ்ச்சிகள்

மணவாளக்குறிச்சியில் 
உத்தம நபியின் உதயதின விழா நிகழ்ச்சிகள்
24-01-2013
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பாக இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் முஹல்ல நிர்வாகிகள் குழுவுடன் இணைந்து உத்தம நபியின் உதயதின விழா ஹிஜ்ரி 1434-ம் வருடம் பிறை 1 முதல் (13-01-2013) பிறை 12 (25-01-2013) வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமும் இரவு 7 மணிக்கு ஜும்ஆ பள்ளியில் ஸுப்ஹான மௌலூது ஓதப்பட்டு, நேர்ச்சை வழங்கப்படுகிறது. 22-01-2013 அன்று இரவு 9 மணிக்கு மணவாளக்குறிச்சி ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மணவாளக்குறிச்சி முஹல்ல உபத்தலைவர் எம்.பஷீர் அஹமது தலைமை தாங்கினார்.

நூருல் ஹுதா மதரஸா மாணவர் எம்.முஹமது நஸீம் கிராஅத் ஓதினார். முஹல்ல பொருளாளர் எம்.அப்துல் சலாம் முன்னிலை வசித்தார். இஸ்லாமிய இளைஞர் பேரவை உபத்தலைவர் முஹம்மது காசீம் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து நூருல் ஹுதா அரபி மதரஸா மாணவ, மாணவியரின் மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர் அப்துர்ரஹ்மான் பார்க்கவி பேசிய காட்சி
முஹல்ல செயற்குழு உறுப்பினர் ஏ.கே.பதர்சமான் வாழ்த்துரையும், ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி முஸம்மில்கான் ஆலிம் பைஜி துவக்கவுரையும் வழங்கினார். தொடர்ந்து மார்க்க சிறப்புரையை காயல்பட்டணம் மஹ்ளரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலவி செய்யது அப்துர்ரஹ்மான் பாக்கவி அஹ்ஸனி "நறுமணம் கமழும் நபி ஸலவாத்தின் நற்பலன்கள்" என்ற தலைப்பில் மார்க்க சிறப்புரை வழங்கினார்.

Post a Comment

Previous News Next News