கூட்டணியை முறியடிப்போம்

கூட்டணியை முறியடிப்போம்
03-01-2012
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக்   கொள்கின்றன. எந்த கட்சியாவது ஒரு கட்சி மக்களுக்கு நல்லது செய்தது அல்லது அந்த தலைவர் மக்களுக்கு நல்லது செய்தார் என்று கூறியா கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்? இல்லவே இல்லை. எந்த கட்சி அதிக வேட்பாளருக்கு (Seat) இடம் தருகிறதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்கிறார்கள்.

மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் தங்கள் கட்சி அதிக இடங்களை பிடிக்க வேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கூட்டணி அமைக்கும் இக்கட்சிகளுக்கா ஓட்டு போடுகிறீர்கள்? சிந்திப்பீர்! இந்தியர்களே மக்களாகிய நாமும் கூட்டணி அமைப்போம். அது தான் "மக்கள்கூட்டணி" தனியாக போட்டியிட துணிச்சல் இல்லாத கட்சிகளை இனி வருகின்ற தேர்தல்களில் புறக்கணிப்போம். சிறிய கட்சியானாலும் தனித்து நிற்கும் கட்சிகளுக்கே ஓட்டு போடுவோம். மக்கள் நலனில் அக்கறை இல்லா, கொள்கைகளில்லா கொள்ளைக் கூட்டணியை முறியடிப்போம், வாருங்கள்! ஒன்று சேர்வோம்! ஆதரிப்பீர் இந்தியன்ஸ்விக்டரிகட்சியை .கூட்டணி இல்லா அரசியல் கட்சி.
நன்றி, வெல்க பாரதம்.

இந்திய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு 
தடையாக இருக்கும் குடிப்பழக்கத்தையும் 
சினிமாப் பழக்கத்தையும் முற்றிலும் 
விட்டு விடுவோம்

J. SHALIN RICHARD, B.Tech(Aero)
General Secretary
Registered Political Party at Election commission of India. Reg. No. 56/172/2001-J.S.111, 950, dd:29-04-2003

Post a Comment

Previous News Next News