மணவாளக்குறிச்சியில் குடியரசு தினவிழா

மணவாளக்குறிச்சியில் குடியரசு தினவிழா
26-01-2013
இந்திய திருநாட்டின் 64-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் மணவாளக்குறிச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
முஸ்லிம் முஹல்ல செயலாளர் நூருல் அமீன்
தேசியக்கொடி ஏற்றிவைத்த காட்சி
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இன்று காலை 9 மணி அளவில் தேசிய கொடியை மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல செயலாளர் நூருல் அமீன் ஏற்றிவைத்தார். அப்போது மணவாளக்குறிச்சி பள்ளிவாசல் இமாம் ஜலீல் உஸ்மானி, பாடகர் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
குடியரசு தின சிறப்பு குறித்து நூருல் அமீன் பேசிய காட்சி
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். குடியரசு தின சிறப்பு குறித்து முஹல்ல செயலாளர் நூருல் அமீன் பேசினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 
குடியரசுதின விழாவில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்
இனிப்பு வழங்கப்பட்ட காட்சி

Post a Comment

Previous News Next News