மணவாளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்
திறப்புவிழா - கோலாகலம்
20-01-2013
மணவாளக்குறிச்சி தேர்வுநிலை பேரூராட்சி புதிய பேருந்து நிலையம் இன்று (20-01-2013) மாலை 4 மணிக்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
![]() |
| மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் அமைச்சர் கே.டி.பச்சைமால் அவர்களை வரவேற்க அ.தி.மு.க.வினர் |
மணவாளக்குறிச்சி பேருந்து நிலையம், சின்னவிளை செல்லும் சாலையில் பாபுஜி மேல்நிலைப்பள்ளி அருகாமையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான இடம் மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள மத்திய தொழிற்சாலையான இந்திய அரிய மணல் ஆலை நிர்வாகம் கொடுத்துள்ளது. அந்த இடத்தில் நவீன முறையில் புதிய பேருந்து நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணி அளவில் மாண்புமிகு வானத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதிக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் குவிந்திருந்தனர். அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து செண்டை மேளம் முழங்க நடத்து சென்று, புதிய பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
![]() |
| செண்டைமேளம் முழங்க அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி |
பின்னர், புதிய பேருந்து நிலையத்தை வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா வரவேற்புரை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.நாகராஜன் தலைமையுரை வழங்கினார்.
தொடர்ந்து குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி இந்திய மணல் ஆலை தலைவர் மொகபத்ரா, பேரூராட்சி உதவி இயக்குநர் பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் இராஜசேகர், முருகேசன், விஜயகுமார், சின்னவிளை பங்குதந்தை பெஞ்சமின் போஸ்கோ, மாவட்ட இந்து முன்னணி பொதுசெயலாளர் மிசாசோமன், முஸ்லிம் முஹல்ல தலைவர் பஷீர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுகுமாரன், பாபுஜி கல்வி குழுமத்தலைவர் நசரேத் சார்லஸ், காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் நன்றி கூறினார். புதிய பேருந்து நிலைய திறப்பு விழா காட்சிகளை காண மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விழாவில் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.






