மணவாளக்குறிச்சி
பாபுஜி கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா
13-01-2013
மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு கல்வியியல் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் கல்லூரியில் பொங்கல் கோலமிட்டு அகலங்கரித்தனர். கரும்புகள் கட்டப்பட்டு, புதிய பானையில் பொங்கலிட்டனர். மாணவ, மாணவிகள் அனைவரும் புதிய ஆடை அணிவித்திருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்து கூறினார்.
 |
| கோலமிடும் மாணவிகள் |
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஜான்சன், முதல்வர் கிளன்னி ஜோசப், ஆங்கிலத்துறை பேராசிரியர் சுஜாதா, கணிதவியல் பேராசிரியர் ஐயப்பன், வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜசேகர், சைக்காலஜி பேராசிரியர் மரியதாசன், பயோ-சைன்ஸ் பேராசிரியர் சோபியா வின்சி, பிசிக்கல் சைன்ஸ் பேராசிரியர் சுனிதா, கம்ப்யூட்டர் சைன்ஸ் ஜாஸ்மின், உடற்கல்வி இயக்குநர் பபிதா, ஆர்ட் & கிராப்ட் ஆசிரியர் கலைச்செல்வி, சீதா, கிளெமென் மற்றும் ஆலோசகர் ஆசிரியர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 |
| கரும்பு கட்டும் ஆசிரியர் |
 |
| பொங்கல் சமைக்கும் மாணவிகள் |
பொங்கல் வழிபாட்டிற்கு பின்னர் அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் பொங்கல் விருந்தில் கலந்து கொண்டனர்.
 |
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட கல்லூரி நிர்வாகி, முதல்வர் மற்றும் ஆசிரியைகள் |
பொங்கல் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோ தகவல்கள்
டையசன்
வரலாற்றுத்துறை
பாபுஜி கல்வியியல் கல்லூரி
மணவாளக்குறிச்சி