புன்னவிளை ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் திருஏடுவாசிப்பு திருவிழா

புன்னவிளை ஸ்ரீமன் நாராயணசுவாமி
திருக்கோவில் திருஏடுவாசிப்பு திருவிழா
 05-12-2012
புன்னவிளை ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் திருஏடுவாசிப்பு திருவிழா 23-11-2012 முதல் 03-12-2012 வரை நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் பக்திகானம், அய்யாவுக்கு பணிவிடை, திருஏடுவாசிப்பு நிகழ்வும் நடந்தது.

தொடர்ந்து 29-ம் தேதி வரை தினமும் திருஏடுவாசிப்பு நிகழ்வும், பணிவிடையும், இனிமம் வழங்குதலும் நடைபெற்றது. 30-ம் தேதி திருக்கல்யாண விழாவும், அன்னதான நிகழ்வும் நடந்தது. 1-ம் தேதி பகவதி அம்மை மற்றும் அம்மைமார் திருக்கல்யாண திருஏடுவாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
2-ம் தேதி அய்யாவுக்கு அணிவிடை நிகழ்வும், அன்னதான நிகழ்வும், பட்டாபிஷேக வாசிப்புடன் திருஏடுவாசிப்பு நிறைவுபெறும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இறுதி நாள் நிகழ்ச்சியில் அய்யாவுக்கு பணிவிடையும், நாதஸ்வர இன்னிசையும், உச்சிகால சிறப்பு பணிவிடையுடன் அய்யா வாகனத்தில் காட்சியருளி ஊர் பவனி வருதலும், ஸ்ரீ ஆஞ்சநேயர் பணிவிடை அய்யா எழுந்தருளி கோவில் வலம் வருதலும், தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடத்தது.
அன்னதான நிகழ்ச்சியை குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் துவங்கி வைத்தார். இதில் குருந்தன்கோடு ஊராட்சி பெருந்தலைவர் கே.டி.உதயம் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சிகளை புன்னவிளை அய்யாப்பதி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Post a Comment

Previous News Next News