இளைஞன் ஒருவர் இந்தியப் பிரதமர்

இளைஞன் ஒருவர்  இந்தியப் பிரதமர்
 09-12-2012
இன்றைய விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வேகத்திற்கு தக்கதாக இந்தியாவும் வளர்ச்சி காண வேண்டுமானால் வேகமான ஒருவரால்தான் முடியும். வயதானவர்களால் வேகமாக செயல்பட முடியாது. இளைஞர்களால் தான் வேகமாக செயல் பட முடியும்.

நம்நாட்டில் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் போது ஏன் இளைஞர்களை தேர்வு செய்கிறார்கள், சிந்தித்துப் பாருங்கள். இளைஞர்களிடம் தான் வேகமும், விவேகமும், சிந்தனை திறனும், உடல் வலிமையையும், ஆரோக்கியமும் இருக்கும். இளைஞர்களால் தான் வேகமாக செயல்பட்டு எதிரிகளை தாக்கி அழிக்க முடியும். 

மேலும், உலகக்கட்டுப்பாடு முழுவதையும் இணையதளம் மூலம் கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்த மனிதன், அதையும் சுருக்கி செல்போனுக்குள் கொண்டு வந்துள்ளான். உலகம் இப்போது உள்ளங்கைக்குள் அடங்கி உள்ளது. இத்தகைய செல்போன்களை வேகமாக இயக்கும் திறமை வாய்ந்த இளைஞன் ஒருவனால் தான், நாட்டின் வளர்ச்சியையும் வேகமாக சிந்தித்து திறமையாக செயல்படுத்த முடியும்.
இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்காகவும், இந்தியப் பிரதிநிதியாக உலகம் முழுவதும் செல்லவும், இந்தியாவிலுள்ள சுமார் 75 கோடி இளைஞர்களை வழி நடத்தவும் முன்னோடியாக செயல்பட திறமையான 35 வயதிற்குட்பட்ட ஒரு இளைஞனை இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுப்போம் வாருங்கள். 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஒரு இளைஞராக இருக்கட்டும். 

நன்றி, வெல்க பாரதம்.

கன்னியாகுமரி                                                                                                                                                         இந்திய மக்கள் நலப்பணியில்
08-08-2012                                                                                                                                                            என்றென்றும் மகிழ்வுடன், ஜஸ்டின்

Post a Comment

Previous News Next News