மணவாளக்குறிச்சி சின்னவிளையில் மீனவர்கள் கோஷ்டி மோதல்

மணவாளக்குறிச்சி சின்னவிளையில் 
மீனவர்கள் கோஷ்டி மோதல்
26-12-2012
மணவாளக்குறிச்சி சின்னவிளை குருசுபாறை அருகில் வருடந்தோறும் கிறிஸ்துமஸ் விழா வழுக்குமரம் போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அது போல் நேற்று கட்டுமரம் போட்டியும் நடைபெற்றது.
கோஷ்டி மோதலை தொடர்ந்து சின்னவிளை மீனவர்கள்
போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி
இந்த போட்டியை மீனவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வந்தனர். இதில் புதூர், பெரியவிளை, சின்னவிளை மற்றும் கடியப்பட்டணம் மீனவர்கள் பங்கு பெறுவது வழக்கம். வழக்கம்போல் நேற்று இங்கு போட்டிகள் தொடங்கியது. 

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் புதூர் மீனவர்களுக்கும், பெரியவிளை மீனவர்களுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னவிளை மீனவர்கள் தலையிட்டு, சமாதானம் செய்து வைத்தனர். 
இளைஞர்கள் ஆடிய பாடிய இடம் வெறுச்சோடி கிடக்கிறது
இதை தொடர்ந்து சின்னவிளை மீனவர்களுக்கும், புதூர் மீனவர்களுக்கும் மீண்டும் தகராறு உருவாக்கி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
காவலுக்கு வந்த போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள்
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) அன்வர்ஷா, மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் புதூர் மீனவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கோஷ்டி மோதலை தொடர்ந்து கடற்கரையை
விட்டு வெளியேறும் மக்கள்
இதைதொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous News Next News