புதிய வழித்தடங்களில் அரசு பஸ் அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்

புதிய வழித்தடங்களில் அரசு பஸ் 
அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்
31-12-2012
நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழி, மணவாளக்குறிச்சி வழியாக குளச்சலுக்கும், மதுசூதனபுரத்தில் இந்து என்.ஜி.ஓ. காலனி வழியாக நாகர்கோவிலுக்கும் புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என்று அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அமைச்சர் பச்சைமாலிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்படி புதிய பஸ் விடப்பட்டு உள்ளது.

இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. ஈத்தாமொழி சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தடம் எண் ‘5 என்‘ நாகர்கோவில்–குளச்சல் பஸ் (வழி: ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு) தொடங்கி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுசூதனபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதே பஸ் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து வண்டிகுடியிருப்பு, சி.டி.எம்.புரம், என்.ஜி.ஓ. காலனி வழியாக மதுசூதனபுரத்துக்கு இயங்கும் ‘கட் சர்வீஸ்‘ தொடங்கி வைக்கப்பட்டது. இந்த புதிய வழித்தட பஸ்சை வனத்துறை அமைச்சர் பச்சைமால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர்கள் தாணுலிங்கம், முத்துகிருஷ்ணன், திருவம்பலம், கிளை மேலாளர்கள் சுனில், கரோலின், பறக்கை ஊராட்சி தலைவர் சுந்தர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சிதம்பரம், ஊராட்சி உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், பால்பாண்டியன், பால்கனி, சீதாலட்சுமி மற்றும் அண்ணா தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன், என்.எம்.செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News