மணவாளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பச்சைமால் வழங்கினார்
11-11-2012
மணவாளக்குறிச்சியில் நடந்த மாற்று திறனாளிகள் சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பச்சைமால் வழங்கினார்.
குமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை, 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, உதவித்தொகை, மானியக்கடன், மருத்துவ அடையாள அட்டை, மாதாந்திர பென்சன், இலவச பஸ்பாஸ், வேலைவாய்ப்பு பதிவு செய்தல், சமூக நலத்துறை சார்பில் தகுதியான பெண் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், நலவாரிய அட்டை பதிவு செய்தல் போன்ற பல்வேறு உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம் முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பச்சைமால், கலெக்டர் நாகராஜன் ஆகியோர் நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில் ஹெலன்டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், புஷ்பலீலா ஆல்பன், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் மோகனசந்திரன், கல்குளம் தாசில்தார் உஷா, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், இணை இயக்குனர் டாக்டர் சம்பத், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் குளோரி எமரால்டு, வேலை வாய்ப்பு அலுவலர் ரவீந்திரன், உதவி திட்ட இயக்குனர் சுலைமான், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் திருமேணி உதயம், ஆணையர் ரிச்சர்டு வில்சன், பேரூராட்சி தலைவர்கள் ஜோஸ்பின்ரீட்டா, மகேஸ்வரி முருகேசன், வசந்தா பால்சேகர், ஊராட்சி தலைவர்கள் சுதா, திருமலை, உஷாகுமாரி, மரியரூபன்குமார், வைகுண்டமணி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.