15 வயதில் ஓட்டுரிமை - இந்தியன் விக்டரி பார்ட்டி
21-11-2012
பழைய காலங்களில் இந்தியர்களிடம் படிப்பறிவு குறைவு, எனவே சிந்தித்து செயல்படும் ஆற்றலும் குறைவாகவே காணப்பட்டது. தற்பொழுதுள்ள இளைஞர்களில் படிக்காதவர்களே இல்லை என்னும் நிலை நம் நாட்டில் உருவாக்கி வருகிறது. ஆகவே மனிதனின் சிந்தனை திறனும் வேகமாக வளர்ந்து வருகிறது.
மேலும் பருவமடையும் வயது 18 லிருந்து 10 ஆக குறைந்துள்ளது. கல்வி அறிவு பெருக்கம், விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு போன்றவற்றால் மனிதனின் செயல் திறனும் பெருகி வருகிறது. எனவே நவீன கால இளைஞர்களின் அறிவு திறனை கருத்தில் கொண்டு மேஜர் வயதை 15 ஆக குறைக்க வேண்டும்.
வருங்கால இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்கள் கையில்தான் உள்ளது. எனவே ஏராளமான இளைஞர்கள் அரசியலில் ஈடுபட ஓட்டுரிமையை 15 ஆக குறைக்க வேண்டும்.தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வயதையும் 15 ஆக குறைக்கவேண்டும். ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் வாருங்கள்.
இந்திய மக்கள் நலப்பணியில்
ஷாலின்,
கன்னியாகுமரி.
Tags:
Other News