உத்தம நபியின் உதய தினவிழா நிகழ்வுகளின் செய்திகள் மற்றும் காட்சிகள்

மணவாளக்குறிச்சி இஸ்லாமிய பெருமக்கள்
முஹல்ல நிர்வாகக்குழுவுடன் இணைந்து
நடத்தும்
உத்தம நபியின் உதய தினவிழா
நிகழ்வுகளின் செய்திகள் மற்றும் காட்சிகள் 

05-02-2012
    மணவாளக்குறிச்சி இஸ்லாமிய மக்கள் மற்றும் முஹல்ல நிர்வாகக்குழுவினர் இணைந்து நடத்திய உத்தம நபியின் உதய நாள் விழா ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை (24-01-2012 முதல் 05-02-2012 வரை) நடந்தது. இதில் முக்கிய நிகழ்வாக பிறை 10 (02-02-2012) மற்றும் பிறை 11 (03-02-2012) ஆகிய இரு நாட்களும் மணவாளக்குறிச்சி பாப்புலர் ஆடிட்டோரயோத்தில் வைத்து சிறப்பு சொற்பொழிவு மாநாடு நடத்தப்பட்டது. அதில் முதல் நாள் நிகழ்வுகளாக இரவு 9.00 தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் முஹல்ல செயலாளர் ஜனாப்.எஸ்.நாசர் தலைமை தாங்கினார். நூருல் ஹுதா மதரஸா மாணவர் எஸ். முஹம்மது ரிஸ்வான் கிராஅத் ஓதினார்.
பாப்புலர் ஆடிட்டோரியத்தின் நுழைவாயிலில் முஹல்ல
சார்பில்  வைக்கப்பட்ட  வரவேற்பு பேனர்
நூருல் மதரஸா மாணவ, மாணவியரின் மார்க்கப் போட்டிகள் 
மணவாளக்குறிச்சி இமாம் இமாம்
ஹாபிழ். ஆலிம்.எம்.முஹம்மது அன்ஸார், ரியாஜி
துவக்கவுரை வழங்கிய காட்சி 
பார்வையாளர்கள் 
தக்கலை இமாம். மௌலவி ஹெச்.முஹம்மது ஸித்தீக் பைஸி
சிறப்புரை வழங்கிய காட்சி 
தக்கலை இமாம். மௌலவி ஹெச்.முஹம்மது ஸித்தீக் பைஸி 
சிறப்புரை வழங்கிய வீடியோ காட்சி 

     நிகழ்ச்சிக்கு, முஹல்ல பொருளாளர் ஜனாப்.எம். அப்துல் ஸலாம் முன்னிலை வகித்தார். வரவேற்புரையை மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை தலைவர் ஜனாப்.எஸ். பீர்முஹம்மது வழங்கினார். தொடர்ந்து நூருல் ஹுதா அரபி மதரஸா மாணவ, மாணவியரின் மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு நடுவராக தக்கலை ஏ.பி.எம்.ஏ. இமாம் மௌலவி ஹெச். முஹம்மது ஸித்தீக், பைஸி இருந்தார். வாழ்த்துரையை உபத்தலைவர் ஜனாப்.எம். பஷீர் அஹமது அவர்களும், துவக்கவுரையை மணவாளக்குறிச்சி இமாம் ஹாபிழ். ஆலிம் எம். முஹம்மது அன்சார், ரியாஜி அவர்களும் வழங்கினார்.

   தொடர்ந்து, தக்கலை ஏ.பி.எம்.ஏ. இமாம் மௌலவி ஹெச். முஹம்மது ஸித்தீக், பைஸி அவர்களின் மாபெரும் சிறப்புரை நடைபெற்றது. அவர் "அண்ணல நபியின் அற்புத வாழ்க்கை அகில உலகிற்கோர் அழகிய முன் மாதிரி" என்ற பொருளில் சிறப்புரை வழங்கினார். முஹல்ல நிர்வாகக்குழு உறுப்பினர் ஜனாப்.எம்.முஹம்மது முபீன் நன்றியுரை வழங்கினார்.

   03-02-2012 வெள்ளிக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு விழா துவங்கியது. முஹல்ல தலைவர் ஜனாப்.எம்.பஷீர் தலைமை வகித்தார். நூருல் ஹுதா மாணவர் ஏ.தன்வீர் நிஷாத் கிராஅத் ஓதினார். இஸ்லாமிய இளைஞர் பேரவை செயலாளர் ஜனாப். எம்.முஹம்மது முனீர் வரவேற்புரையும், முஹல்ல உதவி செயலாளர் ஜனாப். எஸ்.நூருல் அமீன் வாழ்த்துரையும், மணவாளக்குறிச்சி இமாம் ஹாபிழ். ஆலிம் ஆர்.முஹம்மது ஜலீல், உஸ்மானி அவர்கள் துவக்கவுரையும் வழங்கினார்கள். தொடர்ந்து, திருவிதாங்கோடு அல்-ஜாமிவுல் அன்வர் அரபி கல்லூரி பேராசிரியர் மௌலவி எம். தாஜுத்தீன் அஹ்ஸனி அவர்கள் "அண்ணல நபிகளாரின் அற்புத அகமியங்கள்" என்ற பொருளில் சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து முஹல்ல செயலாளர் ஜனாப்.எஸ். நாசர் நன்றியுரை வழங்கினார்.
03.02.2012 அன்று நடந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை
வழங்கிய எம்.பீர் முஹம்மது 
ஜனாப் எஸ்.நூருல் அமீன் வாழ்த்துரை வழங்கும் காட்சி 
மணவாளக்குறிச்சி இமாம்
ஹாபிழ்.ஆலிம்.ஆர்.முஹம்மது ஜலீல் உஸ்மானி
துவக்கவுரை வழங்கிய காட்சி 
ஜனாப் எஸ்.நூருல் அமீன்  அவர்கள் நபி (ஸல்) பற்றிய
ஒரு பாடல் பாடிய காட்சி 
திருவிதாங்கோடு அல்-ஜாமிவுல் அன்வர் அரபிக்கல்லூரி
பேராசிரியர் மௌலவி.எம்.தாஜுத்தீன் அஹ்ஸனி சிறப்புரை
வழங்கிய காட்சி 
விழாவில் கலந்துகொண்டோர்
நின்றுகொண்டு சிறப்புரையை கேட்கும் இளைஞர்கள் 
வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு வழங்கப்படுகிறது 
வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கப்படுகிறது 
முஹல்ல பொருளாளர் ஜனாப் அப்துல் ஸலாம்,
செயலாளர் ஜனாப்.  நாசர் மற்றும்
உறுப்பினர் ஏ.ஆர். அப்துல் காதர் 
திருவிதாங்கோடு அல்-ஜாமிவுல் அன்வர் அரபிக்கல்லூரி
பேராசிரியர் மௌலவி.எம்.தாஜுத்தீன் அஹ்ஸனி சிறப்புரை
வழங்கிய வீடியோ காட்சி 




நிகழ்ச்சி தகவல் "மணவை மலர்" சபீக் ரகுமான்,
புகைப்பட உதவி அப்துல் முனீர் மற்றும் 
அனைத்து நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் 
எடுத்தவர் இர்பான்.
புகைப்படங்களை எடுத்து தந்த இர்பானுக்கு 
"மணவை மலரின்" நன்றிகள் 



மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் திருநபி தினவிழாவில் நேர்ச்சை வழங்கிய நிகழ்ச்சி காண இங்கே கிளிக் செய்யவும்...
முகப்பு 

Post a Comment

Previous News Next News