குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது
27-04-2015
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், வாக்காளரின் செல்போன் எண், மின்னணு அஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளும் திருத்தம் செய்யப்படுகிறது.
PayOffers.in
இந்த பணிகளுக்காக பயிற்சி பெற்ற பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும் இதற்காக சிறப்பு முகாமும் முதல்கட்டமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் 2–ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று மேற்கண்ட பணிகள் நடைபெற்றன. இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று உரிய முறையில் விண்ணப்பித்தனர். முகாம்கள் காலை 10 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெற்றன.
இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு பேரூராட்சிகளின் சார்பாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் கொண்டு சென்றனர்.
PayOffers.in

Post a Comment

Previous News Next News