மணவாளக்குறிச்சி மஹான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா தர்ஹா ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
20-04-2015
மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் உள்ள மஹான் பட்டாணி சாஹிப் ஒலியுல்லா தர்ஹா ஆண்டுவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை சுமார் 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து பிறைக்கொடி ஊர்வலம் புறப்பட்டது. இதில் மதரஸா மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ஆறான்விளை, தேங்காய்கூட்டுவிளை, தருவை, குழிவிளை, மெயின்ரோடு, காந்திநகர், ஆசாரிதெரு வழியாக வந்து தர்ஹாவை அடைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் தர்ஹாவில் கொடியேற்றப்பட்டது. இதில் மணவாளக்குறிச்சி ஜமாஅத் தலைவர் ஹல்பா பஷீர், நூருல் அமீன், அஹமது, சுலைமான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றம் முடிந்தவுடன் பாயாசம் வழங்கப்பட்டது.
ஹிஜ்ரி வருடம் ரஜப் மாதம் முதல் தேதியில் இருந்து ஆண்டு விழா துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் மவுலூது ஓதப்பட்டு, நேர்ச்சை வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:
Manavai News