திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயத்தில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகவேண்டி சிறப்பு பூஜை
20-04-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயத்தில் தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகவேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் கலந்து கொண்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபட்டு மீண்டும் முதல்–அமைச்சராக வேண்டி திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வரம் மகாதேவர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட செயலாளரும். ,முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி அதிமுக நிர்வாகிகளான கண்ணதாசன், எரோணிமூஸ், சேமக்கண், அப்துல் சலாம், மாவட்ட நிர்வாகிகளான அசோகன், சிவகுற்றாலம் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
பூஜை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்