மண்டைக்காடு நவஜோதி மெட்ரிக் பள்ளியில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது
16-04-2015
மண்டைக்காடு நவஜோதி மெட்ரிக் பள்ளியின் 25–வது ஆண்டு விழா வெள்ளிவிழாவாக கொண்டாடப்பட்டது. முதல்வர் வயோலா சுதன் வெள்ளி விழா அறிக்கை வாசித்தார். பள்ளி தாளாளர் ராஜகோபால் பள்ளியின் எதிர்கால திட்டம் குறித்து பேசினார். மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி கீதாகுமார், முன்னாள் முதல்வர்கள் சுதா, துளசிபாய் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
டாக்டர் சேவியர் தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கினார். முன்னாள் ஆசிரியை உமா கோபாலகிருஷ்ணன், பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பில் கணித பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். முடிவில் மாணவ– மாணவியரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்