குமரி மாவட்டத்தில் 1–ம் தேதி கிராம சபை கூட்டம்: கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்

குமரி மாவட்டத்தில் 1–ம் தேதி கிராம சபை கூட்டம்: 
கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்
27-04-2015
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– தொழிலாளர் தினமான வருகிற 1–ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் நடத்திட தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 1–ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல் மற்றும் ஊராட்சிகள் ஒப்புதல் அளித்த வளர்ச்சி பணிகள் கிராம சபை கூட்டத்திற்கு முன்னர் வைத்து ஒப்புதல் அளித்த வளர்ச்சி பணிகள் கிராம சபை கூட்டத்திற்கு முன்னர் வைத்து ஒப்புதல் பெறுதல் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
PayOffers.in
மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்கு தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எனவே கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
PayOffers.in

Post a Comment

Previous News Next News