நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள் நலவாழ்வு சங்க செயற்குழு கூட்டம் நடந்தது

நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள் நலவாழ்வு சங்க செயற்குழு கூட்டம் நடந்தது
18-07-2014
நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள் நலவாழ்வு சங்க செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் ராஜகோகிலா அரங்கில் வைத்து நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் சிவகுமார் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். துணை தலைவர் கண்ணன், அவைத்தலைவர் ராபின்சன், மாவட்ட செயலாளர் சச்சுதானந்தம், அமைப்பாளர் ஜெனார்த்தனன், பொருளாளர் மெல்கியோன், மாவட்ட துணைத்தலைவர் முகம்மது ராபி, துணை அமைப்பாளர் பத்பநாபன், மேற்கு மாவட்ட தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கவும், தகுதி உள்ளவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் கொண்டு வரவும், நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், மீனவர்களுக்காக கடலோர பாதுகாப்பு படை அமைக்கவும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும்காவல் நிலையத்தில் தவறு செய்தவர்களை விசாரித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், இரத்ததானம் செய்பவர்களை ஊக்குவிக்கவும், ஆதரவற்ற மன நோயாளிகள் காப்பகம் அமைத்திட வலியுறுத்தியும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” முருகன்

Post a Comment

Previous News Next News